தென் கொரியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், ஊக்குவிக்கவும் மற்றும் பல தரப்பு மக்களிடையே அவர்களின் சாதனைகளை கொண்டு சேர்க்கவும் கொரிய தமிழ் சங்கமானது ஆண்டுதோறும் "கொரிய தமிழ் சங்க விருதுகள்” வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது. இந்த விருதானது, கொரியா-தமிழ் கலாச்சார மற்றும் மொழியியல் உறவு, பல்வேறு துறைகளில் இந்தியா-கொரியா உறவு, கல்வி மற்றும் விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் பாராட்டத்தக்க பங்களிப்பைச் செய்தவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்-அக்டோபர் மாதங்களில் நடைபெறும் தமிழ் கலை இலக்கிய சந்திப்பு கூட்டத்தில் வழங்கப்படும்., ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் பின்வரும் விருதுகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்,
1) கே.டி.எஸ் விருது-இந்தியா-கொரியா உறவுகளுக்கு
2) கே.டி.எஸ் விருது-அறிவியல் சிறப்பிற்காக
3) கே.டி.எஸ் விருது-இளம் விஞ்ஞானிகளுக்கு
4) கே.டி.எஸ் விருது-தமிழ்-கொரிய உறவுகளுக்கு
5) கே.டி.எஸ் விருது-விளையாட்டுக்கான
6) கே.டி.எஸ் விருது-பொறியாளர்களுக்கு
7) கே.டி.எஸ் விருது-தொழில்முனைவோருக்கு
8) கே.டி.எஸ் விருது-திறமையான தொழிலாளர்களுக்கு
9) கே.டி.எஸ் விருது-சமூக ஆர்வலர்களுக்கு
10) கே.டி.எஸ் விருது-படைப்பாளர்களுக்கு