கொரிய தமிழ்ச்சங்க அட்மின் குழு உறுப்பினர்கள்

KoreaTamilSangam

முனைவர். சு. இராமசுந்தரம்

தலைவர்

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி என்னும் சிற்றூரைசேர்ந்தவர். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் முதுகலை பட்டமும், சியோல் கியாங்கி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். பிளாஸ்டிக் கழிவை உள்ளிடாகப்பயன்டுத்தி இடும் தார்ச்சாலை தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த பத்மவிபூஷன் பேராசிரியர் வாசுதேவன் அவர்களின் ஆராய்ச்சிக்குழுவில் மாணவ ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியவர். பிளாஸ்டிக் கழிவிலான தார்ச்சாலை தொழில்நுட்பத்தை களத்தில் பயன்படுத்த தேவையான முக்கிய படிநிலையை அறிமுகப்படுத்திவர். கல்வி-ஆராய்ச்சி-கட்டுரையாக்கம்-களத்தில் பயன்படுத்த தேவையான தொழில்நுட்பம் உருவாக்கம் என அறிவியல் ஆராய்ச்சியின் படிநிலைகளை இளம் வயதில் எட்டிய ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அறிவியலாளர். கொரியாவில் கடந்த 15 ஆண்டுகளாக வசிக்கிறார். தமிழ்நாடு மற்றும் உலகத்தமிழர் தொடர்பான அரசியல், சமூக, பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டு வழிமுறை குறித்த விடயங்கள் தொடர்பில் படித்து அறிந்துகொள்வதில் ஆர்வமுடையவர்.

KoreaTamilSangam

திருமதி: முனைவர். கிறிஸ்டி கேத்தரின்

துணைத்தலைவர்

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர். அறிவியல் நகரான தேஜோன்-ல் சுங்னம் தேசிய பல்கலையில் புரத அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார், பத்து ஆண்டுகளாக கொரியாவில் வசிக்கிறார், தமிழார்வம் கொண்டவர்.






















KoreaTamilSangam

முனைவர் இராமன் குருசாமி

செயலாளர்

பெருங்குடி, மதுரையை சேர்ந்தவர், புதுச்சேரி நடுவண் பல்கலையில் உயிரி தொழில் நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இங்கு பெருமைமிகு நெசவியல் நகரான தேகுவில் அமைந்துள்ள யோங்னம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். அவர் அங்கீகரிக்கப்பட்ட பன்னாட்டு புகைப்பட கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.




















KoreaTamilSangam

முனைவர். செல்வராஜ் ஆரோக்கியராஜ்

இணை செயலாளர்

புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்த புதுவையைச் சேந்தவர். சியோல் சேஜோங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். அறிவியல் பங்களிப்புக்கான இந்திய அரசின் பல விருதுகளை பெற்றவர். சிறந்த அரசியல்-சமூக திறனாய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது.






KoreaTamilSangam

முனைவர் முனியப்பன் சீனிவாசன்

முதன்மை பொறுப்பாளர்-பொருண்மியம்

தர்மபுரியை சேர்ந்தவர். Korea Advanced Institute of Science and Technology, (KAIST) Daejon-ல் உயிரி- இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். Daegu Gyeongbuk Institute of Science and Technology (DGIST,Daegu)-ல் பணிபுரிகிறார்








KoreaTamilSangam

பொறியாளர். திரு. சகாய டர்சியூஸ் பீ

தகவல் தொழில்நுட்ப பிரிவு முதன்மை பொறுப்பளார்

கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள இராஜாக்கமங்கலம் துறை எனும் கிராமத்தில் பிறந்து, கணினி செயல் பாட்டியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று, தற்போது தென்கொரியாவில் BIXOLON CO.,LTD எனும் நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கூடத்தில் சீனியர் மேனேஜராக பணிபுரிந்து வருபவர். இவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரியாவில் பதினோரு ஆண்டுகளாக வசிக்கிறார்.

KoreaTamilSangam

பொறியாளர். திருமதி. சரண்யா மதிவாணன்

தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை பொறுப்பளார்

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையை சேர்ந்தவர். கணினி பொறியியல் பட்ட படிப்பு முடித்துள்ளார். சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிந்திருக்கிறார். கொரியாவில் இரண்டு ஆண்டுகளாக வசிக்கிறார்.



KoreaTamilSangam

முனைவர் போ. கருணாகரன்

அறிவுரைக்குழுவின் உறுப்பினர்

நீலகிரி மாவட்டம், மேல்குந்தா என்னும் சிற்றுரைச்சேர்ந்தவர். கோவை பாரதியார் பல்கலையில் இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். டைட்டானியம் டைஆக்ஸைடு நானோதுகள் ஆராய்ச்சியில் எம்மில் பலருக்கு முன்னோடி! 17 ஆண்டுகளாக கொரியாவில் வசிக்கிறார். தற்பொழுது Advanced Nano Products, Daejeon-ல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் பணிபுரிகிறார்.

KoreaTamilSangam

முனைவர்: அ. அந்தோணிசாமி

அறிவுரைக்குழுவின் உறுப்பினர்

அண்ணாமலையார் கோவில் அமைந்திருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். சென்னை பல்கலையில் கரிம வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சுமார் 15 ஆண்டுகளாக கொரியாவில் வசிக்கிறார். தற்பொழுது Advanced Nano Products, Daejeon-ல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் பணிபுரிகிறார்.

KoreaTamilSangam

முனைவர்
செ. இரத்ன சிங்

அறிவுரைக்குழுவின் உறுப்பினர்

தென்காசி மாவட்டம், துரைசாமிபுரத்தை சேர்ந்தவர். இங்கு பூசான் தேசிய பல்கலையில் உயிரி தொழில்நுட்ப துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சுமார் 15 ஆண்டுகளாக கொரியாவில் வசிக்கிறார். தற்பொழுது GS Caltex நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் பணிபுரிகிறார்.


KoreaTamilSangam

முனைவர்.
இரா. அச்சுதன்

அறிவுரைக்குழுவின் உறுப்பினர்

தர்மபுரி மாவட்டம், தகடூரை சேர்ந்தவர். இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த எட்டு வருடங்களாக தேகுவில் வசித்து வருகிறார், தற்பொழுது யங்ணம் பல்கலைக்கழகத்தின் இரசாயன பொறியியல் பிரிவில் ஆராய்ச்சி பேராசிரியராக பணி செய்கிறார்

KoreaTamilSangam

முனைவர்.
தா. ஜெபக்குமார் இம்மானுவேல் எடிசன்

அறிவுரைக்குழுவின் உறுப்பினர்

விருதுநகரை சேர்ந்தவர். இவர், திண்டுக்கல் காந்திகிராம பல்கழைக்கழகத்தின் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த ஐந்து வருடங்களாக தேகுவில் உள்ள யங்ணம் பல்கலைக்கழகத்தின் இரசாயன பொறியியல் பிரிவில் ஆராய்ச்சி பேராசிரியராக பணி செய்கிறார்.

கொரிய தமிழ்ச் சங்கம்
© 2019 ~ 2020 koreatamilsangam.com
All Rights Reserved Terms of Use and Privacy Policy