கொரிய தமிழ்ச் சங்கம்

அதிகாரிகளிடமிருந்து தப்ப முயன்று இறந்த
நபருக்கு உதவியில்லை - கொரியா நீதிமன்றம்
தீர்ப்பு!

தென்கொரியா தலைநகர் சியோலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டவிரோத குடியேறிகளை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, அவர்களிடமிருந்து தப்ப முயன்ற மியான்மர் நாட்டைச் சேர்ந்த நபர் உயிரிழந்தார். அவருடைய மனைவி தொடர்ந்த வழக்கை விசாரித்த கொரியா நீதிமன்றம், அவர் வேலை செய்யும்போது இறக்கவில்லை என்றும், அவருடைய மரணத்துக்கு அவருடைய முதலாளி எவ்வகையிலும் காரணமில்லை என்றும், எனவே அவருக்கு நிதியுதவி அளிக்க முடியாது என்று தீர்ப்பு அளித்தது.
 
தென்கொரியாவுக்கு வேலைதேடி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் சட்டவிரோதமாக வருகிறார்கள். அவர்கள், கட்டுமானத் தொழில்களிலும், உணவு விடுதிகளிலும் பணிபுரிகிறார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது, உணவுவிடுதி ஒன்றில் வேலைசெய்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த தான் ஜாவ் ஹ்டாய் என்ற ஊழியர், ஜன்னல் வழியே குதித்தார். சுமார் 25 அடி உயரத்திலிருந்து குதித்த அவர் தலையில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவருடைய இறப்புக்கு உதவித்தொகை கேட்டு அவருடைய மனைவி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருடைய இறப்புக்கும் உணவுவிடுதி உரிமையாளருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் சொல்லி இவர் தப்பிக்க முயற்சிக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

ஒருவேளை அவரைத் தப்பிக்கும்படி உரிமையாளர் கூறியிருந்தால், அந்த ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்ததாக கருதலாம். இந்த வழக்கில் சட்டவிரோத குடியேறி தானாகவே தப்பிக்க முயன்று உயிரிழந்துள்ளார் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

தகவல்: https://www.koreatimes.co.kr/www/nation/2019/12/251_280377.html

இந்த செய்தியை திருமதி.சரண்யா மதிவாணன் தொகுத்து திருத்தியுள்ளார். அதில் தொடர்புடைய ஆதாரங்களிலிருந்து படங்களும் தகவல்களும் அனைத்தும் மேல குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

இந்த இணையதளத்தின் ஆசிரியர் திரு.சகாய டர்சியூஸ்.பீ இச்செய்தியை வெளியிட்டார்.

கொரிய தமிழ்ச் சங்கம்
© 2019 ~ 2020 koreatamilsangam.com
All Rights Reserved Terms of Use and Privacy Policy